பரிசுத்த வேதாகமம் - அறிமுகம்


விவிலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. அதை எபிரேய விவிலியம் என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.

உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தீர்க்கதரிசிகள்! - (ஒரு பார்வை)


#தீர்க்கதரிசிகள்!

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள்...

1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical) மற்றும்
    புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)

2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.


#பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்

#சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

#பெரிய தீர்க்கதரிசி என்றும் #சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?

தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது. ( அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.)

தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)

சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.

தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:

1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).

2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).

3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536).


 வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

9 ஆம்   நூற்றாண்டில்: கி.மு.900 - 800

ஒபதியா, யோவேல், யோனா

8 ஆம் நூற்றாண்டில்:  கி.மு.800 - 700

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500

எசேக்கியேல், தானியேல்

5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400

ஆகாய், சகரியா, மல்கியா

யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:

1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...

ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...

2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்):(எப்பிராயீம், சமாரியா)

ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா

3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.

#இவர்கள் இப்படி அறியப்படுகிறார்கள்:

ஒபதியா - பரியாசக்காரனை கடிந்து கொண்ட தீர்க்கதரிசி

யோவேல் - பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசி

யோனா - முழு உலக தீர்க்கதரிசி

ஆமோஸ் - நீதியின் தீர்க்கதரிசி

ஓசியா - அன்பின் தீர்க்கதரிசி

ஏசாயா - பழைய ஏற்பாட்டு சுவிஷேசகன்

மீகா - ஏழைகளின் தீர்க்கதரிசி

எரேமியா - கண்ணீரின் தீர்க்கதரிசி

செப்பனியா - மேடைப் பேச்சாளன்

நாகூம் - கவிஞன்

ஆபகூக் - தத்துவ மேதை

எசேக்கியேல் - தரிசன தீர்க்கதரிசி

தானியேல் - ஞானத்தை வெளிப்படுத்தின தீர்க்கதரிசி

மல்கியா - விரிவுரையாளர்

ஆகாய், சகரியா - தேவாலய தீர்க்கதரிசிகள்.

For more details visit..
www.thewordtoday.in